

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மத்திய நெடுஞ்சாலை, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றி ரவு சந்தித்துப் பேசினார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் இரவு 7.10 முதல் 8 மணி வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. முதல்வராக இருந்த ஜெயல லிதா மறைவால் தமிழக அரசிய லில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. புதிய முதல்வ ராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப் பேற்றுள்ளார். அவர் டெல்லி சென்று வந்த பிறகு, தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப் பட்டது.
இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பு மட்டுமின்றி, முதல்வராகவும் சசிகலா பதவியேற்க வேண்டும் என பல அமைச்சர்கள் வெளிப் படையாகவே பேசி வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறதா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
துணை ராணுவப் படையின ரைக் கொண்டு தலைமைச் செயலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது இந்திய கூட்டாட்சித் தத்துவத் துக்கு எதிரானது என மாநிலங்க ளவை அதிமுக துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆளுநரை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாகப் பேசியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் பேசிய பொன்.ராதா கிருஷ்ணன், ‘‘வாஜ்பாய் அமைச்சரவையில் நானும் வித்யாசாகர் ராவும் அமைச்சர் களாக இருந்தோம். அந்த நட்பின் அடிப்படையில் அவரை சந்தித்துப் பேசினேன். மத்திய அமைச்சர் என்ற முறையில் சில விஷங்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன்’’ என்றார்.