

பிரதமரின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகளை நாட்டு மக்களிடம் விளக்கமாக பிரச்சாரம் செய்ய இன்றுமுதல் (டிச.22) பதினைந்து நாட்களுக்கு மாவட்ட அளவில் பொதுக்கூட்டமும், வட்டார, நகர அளவில் தெருமுனைப் பிரச் சாரமும் செய்யப்படும் என்று தமி ழக காங்கிரஸ் தலைவர் சு.திரு நாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:-
நமது நாட்டில் 98 சதவீதம் பண பரிவர்த்தனையாகவும், 2 சதவீதமே பணமற்ற பரிவர்த்தனை யாகவும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணமற்ற பரிவர்த் தனை இந்தியாவில் சாத்தியமா என்கிற குறைந்தபட்ச ஆய்வுகூட செய்யாமல் அறிவிப்புகள் வெளிவருகின்றன. நமது நாட்டில் கிராமங்களில் வசிக்கும் 65 சதவீத மக்களும், கல்வியறிவில்லாத மக் களும் ரொக்கமில்லா பொருளா தாரத்தில் இணைந்து கொள் வதற்கு வாய்ப்பே இல்லாத நிலை போன்ற பாஜக அரசின் அறிவிப்பு கள் மிகுந்த கண்டனத்துக்குரியது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் ஏற்பட்ட பாதிப்புகளை நாட்டு மக்களிடம் விளக்கமாக பிரச்சாரம் செய்கிற முயற்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஈடுபட்டிருக் கிறது. இன்றுமுதல் (டிச.15) பதினைந்து நாட்களுக்கு மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்களும், வட்டார நகர அளவில் தெருமுனைப் பிரச்சாரங்களும் செய்யப்படவுள்ளன. இப்பிரச்சார இயக்கத்தில் மத்திய அரசின் அறிவிப்பை தோலுரித்துக் காட்டு கிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தயாரித்த துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர் விநியோகிப்பார்கள்.
வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவன் திறந்த வெளியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப் புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இக்கூட்டத்தில், “பண மதிப்பு இழப்பு - பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல்” என்ற தலைப்பில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரையாற்றுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.