கோவை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் புதிய நோட்டுகளுடன் நைஜிரிய நபர் கைது
டெல்லி விமான நிலையத்தில் 54 லட்சம் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த நைஜிரியாவை சேர்ந்த நபர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகு கோவை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2. 30 மணியளவில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லவிருந்த நைஜிரியாவை சேர்ந்த நபரை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் இடைமறித்து விசரானை நடத்தினர். அப்போது அவரிடமிருந்து 54 லட்சம் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, "இந்த சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் நடந்தது. சம்பந்தப்பட்ட நபர் டெல்லியிலிருந்து கோயம்புத்தூர் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்பின் வருமான அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளித்தபின் அவர் கோயம்பத்தூர் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பின் அவர் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 54 லட்ச புதிய ரூபாய் நோட்டுகளும், 4 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளும் கைபற்றப்பட்டன" என்று கூறினர்
