

சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அதிதீவிர புயலான 'வார்தா' பெயரின் பொருள் தெரியவந்ததுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியன்மார், மாலத்தீவு, ஓமன் நாடுகள் புயல்களுக்கு பெயர் வைத்து வருகின்றன.
இந்நிலையில், வார்தா என்ற பெயரை பாகிஸ்தான் நாடு சூட்டியுள்ளது. வார்தா என்றால் 'சிவப்பு ரோஜா' என்று அர்த்தம்.