Published : 29 Dec 2022 08:04 PM
Last Updated : 29 Dec 2022 08:04 PM

புத்தாண்டு, தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப கூடுதலாக 600 பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்

கோப்புப்படம்

சென்னை: புத்தாண்டு, அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப வசதியாக நெல்லை, நாகர்கோயில், மதுரை, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் திருச்சியில் இருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக , சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் அடிப்படையில் வரும் 01.01.2023 அன்று வரை திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

இது தவிர கோயம்புத்தூர் , ஈரோடு , புதுச்சேரி ஆகிய முக்கிய நகரங்களுக்கு, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் , கூடுதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் திட்டமிட்டுள்ளன. அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in. மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சேவையினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x