Published : 29 Dec 2022 04:07 AM
Last Updated : 29 Dec 2022 04:07 AM

புத்தாண்டையொட்டி கோவையில் 1,600 காவலர்கள் பாதுகாப்பு: மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை

பிரதிநிதித்துவப் படம்

கோவை: புத்தாண்டையொட்டி கோவை மாநகரில் 1,600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புத்தாண்டையொட்டி கேளிக்கை மற்றும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், உள்ளரங்குகள், விடுதிகள் ஆகியவற்றின் நிர்வாகங்கள், அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைஏற்படாத வகையில் இருக்கதேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் கூடிய நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.

கொண்டாட்டத்தின் போது சந்தேகப்படும்படியான பொருட்கள், நபர்கள் குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை பரிசோதித்து அவை முழுமையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், மதுபோதை வாகன ஓட்டுநர்கள், வாகனப் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை மாற்றி அதிக சத்தத்துடன் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகரில் உள்ள அனைத்து மேம்பால வழித்தடங்களிலும் வரும் 31-ம் தேதி இரவு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. விபத்தில் சிக்குபவர்களை மீட்க அண்ணாசிலை, கொடிசியா சந்திப்பு, டி.பி.ரோடு, உக்கடம் ஆத்துப்பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவை மாநகரின் 11 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும். கொடிசியா சந்திப்பு, தாமஸ் பார்க், எல்.ஐ.சி சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, ஆத்துப்பாலம், ஆர்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் 6 அதிவிரைவுப் படைகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 4 துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் உட்பட 900 காவலர்கள், சிறப்புக்காவல் படையினர், ஊர்க் காவல்படையினர் என 1,600 பேர் புத்தாண்டு தினத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x