சசிகலாவுக்கு எதிராக போராட்டம் எதிரொலி: ஜெயலலிதா வீட்டுக்குள் செல்ல தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு

சசிகலாவுக்கு எதிராக போராட்டம் எதிரொலி: ஜெயலலிதா வீட்டுக்குள் செல்ல தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு
Updated on
1 min read

போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் சென்று பார்வையிட அதிமுக தொண் டர்கள், பொதுமக்களுக்கு நேற்று திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங் களில் இருந்து வந்த தொண் டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென் றனர்.

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அவரது உடல், எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 5 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அதிமுகவினர், ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையத்தில் நேற்று முன்தினம் வரையில் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுக தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் போயஸ் தோட்டம் அருகே சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முக்கிய கட்சி நிர்வாகிகளைத் தவிர, தொண்டர்கள், பொதுமக்களை ஜெயலலிதா வீட்டுக்குள் நேற்று அனுமதிக்கவில்லை.

இதனால், போலீஸாருடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா வீட்டை பார்க்க முடியாமல் வெளியூரில் இருந்த வந்த கட்சிச் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

முதல்வர் ஆலோசனை

இதற்கிடையே, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர், நேற்றும் போயஸ் தோட்டத்துக்கு வந்து சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலை 11.40 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு வந்தார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, டி.கே.எம்.சின்னையா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் போயஸ் தோட்டத்துக்கு வந்து சசிகலாவை சந்தித்துப் பேசினர்.

கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக அவர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்திவிட்டு, மதியம் 1 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in