Published : 28 Dec 2022 07:51 PM
Last Updated : 28 Dec 2022 07:51 PM

சென்னையில் 372 இடங்களில் ரூ.430 கோடியில் நவீன கழிவறைகள்: மாநகராட்சி அனுமதி

சென்னை: மெரினா உள்ளிட்ட 3 மண்டலங்களில் நவீன கழிவறைகளை ரூ.430 கோடியில் அமைக்கும் பணிக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் பொது இடங்களில் கழிவறை வசதியை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மண்டலம் 5, 6 மற்றும் 9 வது மண்டலத்தின் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்படுத்துதல், திருப்பி அளித்தல் என்ற முறையின் கீழ் கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து டெண்டர் கோரி இருந்தது.

தற்போது இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகளை மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 372 இடங்களில் ரூ.430.11 கோடி மதிப்பில் தனியார் பங்களிப்புடன் பொது கழிவறைகள் கட்டப்படவுள்ளது. ஒராண்டு காலத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நவீன கழிவறைகளில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வசதி, டிடிசிவி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு உள்ளிட்டவைகள் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x