Published : 28 Dec 2022 06:15 AM
Last Updated : 28 Dec 2022 06:15 AM
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிஐ காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், கோடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு சம்பவம் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிபிஐ கண்காணிப்பாளர் முரளி ரம்பாவுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடநாடு சம்பவம் நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக முரளி ரம்பா பணியாற்றினார். தற்போது அவர் சிபிஐயில் பணியாற்றுவதால் அவருக்கான சம்மனை சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு சிபிசிஐடி அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT