Published : 28 Dec 2022 04:15 AM
Last Updated : 28 Dec 2022 04:15 AM
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேக பஞ்சாமிர்தம் அரை கிலோ டப்பா ரூ.35-க்கும், டின் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மலைக்கோயில் மற்றும் கிரிவீதி உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சாதாரண நாட்களில் 20 ஆயிரம் டப்பாக்கள் விற்பனையாகும் நிலையில், பக்தர்கள் வருகை அதிகரிப்பால், தற்போது தினமும் ஒரு லட்சம் டப்பாவுக்கு மேல் விற்பனை ஆகிறது. இதனால் தேவஸ்தானத்தின் அபிஷேக பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒரு சில ஸ்டால்களில் மட்டுமே பஞ்சாமிர்தம் கிடைத்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து கோயில் இணை ஆணையர் நடராஜன் கூறும்போது, பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு எதுவும் இல்லை. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் தேவை அதிகரித்துள்ளது. தினமும் 1.10 லட்சம் டப்பாக்கள் தயாரித்து வந்த நிலையில் கூடுதலாக 7,000 டப்பாக்கள் தயாரிக்கப்படுகின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT