Published : 03 Dec 2016 08:55 AM
Last Updated : 03 Dec 2016 08:55 AM

அடையாறு, வேகவதி ஆறுகள் ரூ.21.75 கோடியில் புனரமைப்பு: ஒப்பந்ததாரரை தேடுகிறது பொதுப்பணித்துறை

புலப்படம் (எப்எம்டி ஸ்கெட்ச்) அடிப் படையில், அடையாறு ஆறு புனர மைப்பு பணிகளை மேற்கொள்ள வும், வெள்ளத்தால் சேதமான காஞ்சி புரம் வேகவதி ஆற்றை புனரமைக் கவும் தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்தம் கோரியுள்ளது.

சென்னையில் ஓடும் முக்கிய மான ஆறுகளில் ஒன்று அடை யாறு. காஞ்சிபுரம் மாவட்டம் மாகாணியம் மலையம்பட்டு பகுதி யில் உருவாகிறது. அதன்பின், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரில் உள்ள ஆதனூர் ஏரியில் தொடங்கி, 42.5 கிமீ தூரம் பயணித்து, சென்னையில் பட்டினப்பாக்கத்தில் கடலில் கலக்கிறது. ஆற்றின் அக லம் சில இடங்களில் 10 மீட்டராக வும், சில இடங்களில் 200 மீட்ட ராகவும் உள்ளது. இதன் அதிகபட்ச கொள்ளளவு வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாகும். ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் இறுதியில் பெய்த கன மழையால் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியைத் தாண்டி மழைநீர் சென்றது. இதனால், காஞ்சிபுரம் மற்றும் சென்னையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, ஆற்றங்கரை யோரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆற்றின் நீர்ப்போக்கில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. தொடர்ந்து கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்தாண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக கரைகளும் சீரமைக்கப்பட்டன.

இருப்பினும், கடந்த பல ஆண்டு களுக்கு முன், அடையாறு இருந்த விதத்தில் அதை சீரமைக்க பொதுப் பணித்துறை முடிவெடுத்தது. இதையடுத்து, 1987-ம் ஆண்டு புலப்படம் அடிப்படையில், அடை யாறு ஆற்றை தூர்வாரி, அகலப் படுத்தி, சீரமைக்க திட்டமிடப்பட்டது. இது தொடர்பான திட்ட அறிக்கை, பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறையால் பரிந்துரைக்கப் பட்டது. இதே போல், கடந்தாண்டு வெள்ளத்தின் போது சேதமடைந்த வேகவதி ஆற்றையும் சீரமைக்க, பொதுப்பணித்துறை பரிந்துரைத் தது. இதற்கான ஒப்புதலை தமிழக அரசு அளித்தது. இதையடுத்து, இரு திட்டங்களுக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அடையாறு ஆற்றில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆதனூர் முதல் மியாட் மருத்துவமனை வரை புனரமைக்கவும், அகலப்படுத்தி, தூர்வாரவும், தேவையான பகுதி களைக் கையகப்படுத்தவும் ரூ.17 கோடியே 85 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் வேகவதி ஆறு ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பில் சீரமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் இறுதியானதும் பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x