Published : 28 Dec 2022 04:37 AM
Last Updated : 28 Dec 2022 04:37 AM
கிருஷ்ணகிரி: சிப்காட் அமைக்க விளைநிலங் களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, உத்தனப்பள்ளியில் 2-வது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க 3,034 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு, குறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள், உத்தனப் பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. அப்போது, சூளகிரி வட்டாட்சியர் அனிதா பேச்சு வார்த்தை நடத்தினார்.
“விளைநிலத்தை கையக ப்படுத்த மாட்டோம் என ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடு வோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் மாவட்டம் முழுவதும் போராட்டம் விரிவுப் படுத்தப்படும்” என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பெருமாள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறிவிட்டு வட்டாட்சியர் அங்கிருந்து சென்று விட்டார். நேற்று மாலை வரை முடிவு எட்டாத நிலையில் போராட்டம் தொடர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT