Published : 24 Dec 2016 09:29 AM
Last Updated : 24 Dec 2016 09:29 AM

புயலால் சேதமடைந்த மின்சாதனங்களை சீரமைக்க ரூ.1,093 கோடி செலவாகும்

‘வார்தா’ புயலால் சேதமடைந்த மின்சாத னங்களை சீரமைக்க ரூ. 1.093 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

‘வார்தா’ புயலால் சென்னை, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 670 மின்மாற்றிகள், 4,500 மின்பகிர்மானப் பெட்டிகள், 54 உயரழுத்த மின் கோபுரங்கள், 29,907 மின்கம்பங்கள், 15 ஆயிரம் கி.மீ. நீளத்திலான மின்கம்பிகள் சேதமடைந்தன. இவற்றை தற்காலிகமாக சீரமைக்க ரூபாய் ஆயிரத்து 93 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி களுக்கு மின்சாரம் கொண்டு வரும் மின்வழித்தடங்களில் உள்ள சேதமடைந்த உயரழுத்த மின்கோபுரங்கள் சீர்செய்யப் பட்டதால் சென்னைக்கு தேவையான 2 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் முழுமையாக விநியோகம் செய்யப்பட் டுள்ளது.

சென்னையின் மின்தேவை டிசம்பர் மாதத்தில் சராசரியாக 35 முதல் 40 மில்லியன் யூனிட் மின்நுகர்வாக இருக்கும். இந்நிலையில், இப் புயல் காரணமாக சென்னையில் கடந்த 14-ம் தேதியன்று 15 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த மின்நுகர்வு தற்போது 36 மில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x