

ரயில்வே பட்ஜெட்டில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க விரும்புவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே ரூ.8 ஆயிரம் கோடிக்கு கட்டண உயர்வை, கடந்த கால அரசின் முடிவு அது என்று கூறி அறிவித்துவிட்டு, இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள், ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு சென்னையில் இருந்து அதிவேக ரயில்கள் விடப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒன்பது புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன.
துப்புரவுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறியிருப்பதும், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க விரும்புவதாக கூறியிருப்பரும் வரவேற்கத்தக்கதல்ல. ரயில்வே பாதுகாப்புப் பணியில் 17 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவர், 4 ஆயிரம் பெண் போலீஸ் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது வரவேற்கக் கூடியதாகும்.