Published : 27 Dec 2022 04:10 AM
Last Updated : 27 Dec 2022 04:10 AM

என்எல்சியை கண்டித்து பேரணி: முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், வேல்முருகன் பங்கேற்பு

நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் மற்றும் கொடுக்க இருப்பவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோர்.

கடலூர்: என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர் கள் மற்றும் கொடுக்க இருப்பவர் களுக்கான கோரிக்கைகளை முன் வைத்து, அனைத்துக் கட்சி சார்பில் நேற்று மாலை நெய்வேலியில் பேரணி நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

2013-ம் ஆண்டு வெளியிட்டநில ஆர்ஜித சட்டத்தை முழுமையாக என்எல்சி நிர்வாகம் அமல்படுத்த வேண்டும். ஏற்கெனவே என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்ததால் பாதிக்கப்பட்டு, இதுவரை வேலை பெறாதவர்களுக்கு நிரந்தர வேலை என்எல்சி நிறுவனத்தில் வழங்க வேண்டும். புதிதாக நிலம் எடுக்க உள்ளவர்களுக்கு அவார்டு வழங்கும் நாளிலேயே, நிரந்தர வேலைக்கான பணி ஆணையை வழங்க வேண்டும்.

வீடு நிலம் கொடுத்தவர்களை தவறான புரிதலுக்கு உள்ளாக்கி வாழ்நாள் நிவாரணமாக வேலை வாய்ப்பிற்கு பதில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 500 கொடுக்கப்பட்டதை ஏற்க முடியாது; அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

2000-வது ஆண்டுக்கு பிறகு எடுத்த நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ 1 கோடி வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 20 சென்ட் மாற்று மனைப்பட்டா வழங்க வேண்டும். நில ஆர்ஜித குறைகளை களைய துணை ஆட்சியர் அந்தஸ்தில் ஒரு தனி அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானவில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் இந்தப் பேரணி புறப்பட்டது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திரவிடர் கழக பொது செயலாளர் துரை சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மக்கள் அதிகாரம் ராஜூ மற்றும் பிற அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். பேரணியில் 2 ஆயிரத்துக்கும மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, என்எல்சி நிர்வாகத்தினருக்கு தங்கள் கோரிக்கையை முன்வைத்து முழக்கமிட்டபடி சென்றனர்.

இந்தப் பேரணி நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தை இரவு 8 மணியளவில் அடைந்தது. அங்கு, பேரணியில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள் நோக் கவுரையாற்றினர். இந்தப் பேரணி யையொட்டி வடக்கு மண்டல ஐஜி கண்ணன், விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் எஸ்பி சக்தி கணேசன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

2013-ம் ஆண்டு வெளியிட்ட நில ஆர்ஜித சட்டத்தை முழுமையாக என்எல்சி நிர்வாகம் அமல் படுத்த வேண்டும். புதிதாக நிலம் எடுக்க உள்ளவர்களுக்கு அவார்டு வழங்கும் நாளிலேயே, நிரந்தர வேலைக்கான பணி ஆணையை வழங்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x