

‘வார்தா’ புயலால் சென்னை உட்பட 3 மாவட்டங்களிலும் 24 பேர் இறந்துள்ளனர். இனி எத்தனை புயல்கள் வந்தாலும் மக்களை பாதுகாக்க தமிழக அரசு தயாராக உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள பேரிடர் தகவல் மையத் தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
பேரிடர் காலங்களில் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண் டும், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு வழிகாட்டியுள்ளார். அதன் அடிப் படையில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைககள் எடுத்ததால்தான் உயிர்ச்சேதம் அதிகளவில் ஏற்பட வில்லை. ஆனால் சூறைக்காற்று, மழை காரணமாக பொருட்சேதம் அதிகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சேதங்களைப் பல்வேறு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ‘வார்தா’ புயலுக்கு இதுவரை 24 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் 104 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு 3 வேளை உணவு, குடிநீர், பிரட், பால் மற்றும் மருத்துவ வசதிகள், போர்வை உள்ளிட்டவை வழங் கப்பட்டன.
3,056 குடிசைகள்
புயலால் 28 ஆயிரம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இதுதவிர 5,500 ஹெக்டேர் வாழை மற்றும் பப்பாளி ஆகிய தோட்டப்பயிர்களும் சேதமடைந்துள்ளன. 529 மாடுகள், 291 ஆடுகள், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. சேதமடைந்த குடிசைகளின் எண்ணிக்கை 70 ஆயிரம். இதில் 3,056 குடிசைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
பாதிப்புகளுக்கான நிவாரணம் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அமைச்சர்களால் வழங்கப்படு கிறது. சாலைகளில் மரங்களை அகற்றி, மின் கம்பங்களைச் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடந்துவருகின்றன. முழுமையான சேதம் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி நிவாரணத் தொகை கோரும் மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் அளித்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார். தொடர்ந்து நிருபர்களின் கேள்வி களுக்கு அவர் பதிலளித்ததாவது:
தொலைத் தொடர்பு சேவை இன்னும் சீரமைக்கப்படவில்லையே?
தொலைத் தொடர்பு நிறுவனங் களுடன் புயலுக்கு முன்னரே 5 முறை வருவாய் நிர்வாக ஆணை யர், வருவாய்த்துறை செயலர் மற் றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தேவையான அளவு டீசல் இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத் தப்பட்டது. தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தவும், நிவாரணம் தொடர்பாகவும் மத்திய அரசுடன் பேசியுள்ளோம். விரைவில் 100 சதவீதம் தொலைத் தொடர்பு சீரடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் நிலைமை சீரடையாமல் உள்ளதே?
மின் கம்பங்கள், மின் மாற்றி கள் மட்டுமின்றி மின் தொட ரமைப்புக்கான கோபுரங்களும் அதிக அளவில் சேதமடைந்துள் ளன. இவற்றை சீரமைப்பதற் கான பொருட்கள் இருந்தாலும், ஆட்களைக் கொண்டு வடி வமைக்க வேண்டியதிருப்பதால் தாமதமாகிறது. விரைவில் இப்பணிகள் முடிந்து விநியோகம் சீராகும்.
புயல் நிவாரணம் எந்த அடிப்படையில் அளிக்கப்படுகிறது?
கடந்த முறை வெள்ளத்தின் போது, சிறப்பு நிவாரணத்தை ஜெயலலிதா அறிவித்திருந்தார். தற்போது, பேரிடர் மேலாண்மை விதிகள்படி நிவாரணம் வழங்கப் பட்டு வருகிறது. சிறப்பு நிவா ரணத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார்.
மேலும் ஒரு புயல் விரைவில் தாக்கும் என கூறப்படுகிறதே?
தற்போதுள்ள முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் புயலுக் காக எடுக்கப்பட்டவை அல்ல. வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே நாம் முன்னெச்சரிக்கை யாக எடுத்திருந்த நடவடிக்கைகள் தான். எனவே, எத்தனை புயல்கள் வந்தாலும் சமாளிக்கவும் மக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.