விரைவில் பாம்பனில் செங்குத்து தூக்குப் பாலம்

விரைவில் பாம்பனில் செங்குத்து தூக்குப் பாலம்
Updated on
1 min read

பாம்பனில் உலகின் முதல் ரயில்வே செங்குத்து தூக்குப் பாலம் ரூ.40 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே முதன்மை பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்துள் ளார்.

இந்திய நாட்டின் நிலப் பகுதி யுடன் ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் கடலில் அமைந்திருக்கும் பாம்பன் ரயில் பாலம் 24.2.1914-ல் திறக்கப்பட்டது. 1964 டிச.22-ல் தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது இப்பாலம் சிறிதளவு சேதமடைந்தது. உடனே 45 நாள் பராமரிப்புக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே முதன்மை பொறியாளர் சுயம்புலிங்கம் பாம்பன் ரயில் பாலத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: பாம்பன் ரயில் பாலத்தின் மத்திய பகுதியில் உள்ள தூக்குப் பாலத்தை அகற்றி விட்டு செங்குத்து தூக் குப் பாலம் ரூ. 40 கோடி மதிப்பில் விமானத் தொழில் நுட்பத்துக்கு பயன்படக்கூடிய அலுமினிய உலோகக் கலவை கொண்டு தயாரிக்கப்பட உள்ளது.

புதிதாக அமைய உள்ள தூக்குப் பாலம் மோட்டார்கள் மூலம் இயங்கும். எனவே 3 நிமிடங்களுக் குள் பாலத்தை திறந்து 2 நிமிடங் களுக்குள் பாலத்தை மூடிவிட லாம். இதுபோன்று கடலில் செங்குத்து சாலை தூக்குப் பாலம் பிரான்ஸ் நாட்டில் மட்டுமே உள்ளது.

மார்ச் மாதம் பாம்பன் ரயில்வே நிலையம் அருகே தூக்குப் பாலம் பொருத்துவதற்கான பணிகள் தொடங்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in