Published : 14 Apr 2014 08:27 AM
Last Updated : 14 Apr 2014 08:27 AM

மோடி அலையை அம்மா அலை தூக்கிச் சாப்பிட்டுரும்: நடிகர் செந்தில் சிறப்புப் பேட்டி

எம்.ஜி.ஆர். விசிறியான நடிகர் செந்தில் 1989-லிருந்து அதிமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். நீலகிரி பிரச்சாரத்தில் இருந்த அவர், ’தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

மின்வெட்டு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் இந்த முறை அதிமுக வெற்றிக்கு சவாலாக இருக்கும் போலிருக்கிறதே?

மக்களுக்குத் தெரியும்ல.. மழையில்லைன்னு அவங்களுக்கு தெரியாதா? அம்மா பதவியைவிட்டு இறங்கும்போது, வெளி மாநிலத்துக்கு கரண்டு குடுக்குற நிலைமை இருந்துச்சா இல்லையா? அதை கருணாநிதிதானே கெடுத்து குட்டிச்சுவராக்குனாரு.

நீங்க இவ்வளவு சொல்றீங்க.. கரூர் தம்பித்துரை உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி பண்ணியிருக்காங்களே?

எனக்குத் தெரிஞ்சு அப்படி ஏதும் நடந்ததா தெரியல. அப்படின்னா நானும்தானே பிரச்சாரத்துக்கு போறேன். என்னோட காரை மறிச்சிருப்பாங்களே!

விஜயகாந்த் இந்தத் தேர்தலில் வலுவான கூட்டணியில செட்டில் ஆகிட்டாரே?

போன தேர்தல்ல எங்களோட கூட்டணி வச்சு நாங்க கட்டுன புத்துக்குள்ள சொகுசா வந்து படுத்துக்கிட்டாரு விஜயகாந்த். ஊழல் பத்திப் பேசுறாரே... மெடிக்கல் காலேஜ் கட்ட எங்கிருந்து பணம் வந்துச்சுன்னு மொதல்ல சொல்லிட்டு அப்புறமா இவரு ஊழல பத்திப் பேசட்டும்.

ஆட்சிக்கு வந்த மூன்றே மாசத்துல மின்வெட்டுப் பிரச்சினைய தீர்த்துவைப்போம்னு சொன்னீங்க.. ஆனா, மூணு வருஷம் ஆகியும் பிரச்சினை தீரலியே?

கரண்டு என்ன அண்ணாச்சி கடையிலயா விக்கிது? எல்லாத்தை யும் நாசம் பண்ணிட்டுப் போயிட் டாங்க. கொஞ்சம் கொஞ்சமாத் தானே சரி செய்யமுடியும். சரி பண்ணிக்கிட்டு இருக்கையிலயே கருணாநிதி ஆளுங்க உள்ள இருந்துக்கிட்டு சதி பண்றாங்க. இங்க மாத்திரமில்லைங்க... போலீஸுக்கு அம்மா எம்புட்டோ செஞ்சிருக்காங்க. ஆனா, இப்ப அவங்களே எங்களை கண்டுகிறதில்லை தெரியுமா?

கம்யூனிஸ்ட்களை கடைசி நேரத்துல ஜெயலலிதா கழற்றி விட்டது சரியில்லைன்னு விமர்சனங்கள் வருதே?

நாற்பது தொகுதிகள்லயும் நம்மளே நின்னு ஜெயிச்சு கருணாநிதிக்கும் காங்கிரஸுக்கும் பாடம் புகட்டணும்னு அம்மா நினைச்சாங்க. அதனால, தனிச்சுப் போட்டியிடுறாங்க.

மோடி அலை வீசுறதா சொல்றாங் களே.. பிரச்சாரத்துக்கு போற இடங்கள்ல உங்க கண்ணுக்கு அப்படி ஏதாச்சும் தெரியுதா?

எங்களுக்குத் தெரிஞ்சது அம்மா அலைதான். மோடி அலையை எல்லாம் அம்மா அலை தூக்கிச் சாப்பிட்டுரும் பாருங்க.

பாஜக-வை அதிமுக விமர்சனம் செய்வதில்லை. தேர்தலுக்குப் பிறகு மோடி பிரதமராக அதிமுக ஆதரவளிக்கும்னு பரவலா பேசிக்கிறாங்களே.. விஷயம் உங்க காதுக்கு வந்துச்சா?

காங்கிரஸும் திமுக-வும் இப்ப புருஷன் பொண்டாட்டி கணக் காத்தான் சண்டை போட்டுக் கிட்டு இருக்காங்க. தேவைப்பட்டா நாளைக்கே கட்டிப்பிடிச்சுக்கு வாங்க. அதனால, மொதல்ல இவங்க ரெண்டு பேரையும் தாக்கிப் பேசுறோம். மத்தவங்கள அப்புறம் பாத்துக்குவோம்.

திமுக தலைவர் கருணாநிதியை நீங்க வாய்க்கு வந்தபடி ஏசுறதா சொல்றாங்களே?

பின்ன என்ன தம்பி.. அவரு நல்லது செஞ்சிருந்தா பாராட்டலாம். அப்படி எதுவும் செஞ்சதா தெரியல. மஞ்சப் பையும் கையுமா மெட்ராஸுக்கு வந்த கருணாநிதி இப்ப உலகப் பணக்காரர்கள் வரிசையில நிக்கிறார். அவரது பேரன் தயாநிதி மாறன் தன்னோட வேட்பு மனுவுல தனக்கு பத்து கோடிதான் சொத்துன்னு சொல்லிருக்காரு. இத நாம நம்பணும். இதையெல்லாம் நாங்க பேசக்கூடாதா?

நாற்பது தொகுதிகள்லயும் நம்மளே நின்னு ஜெயிச்சு கருணாநிதிக்கும் காங்கிரஸுக்கும் பாடம் புகட்டணும்னு அம்மா நினைச்சாங்க. அதனால, தனிச்சுப் போட்டியிடுறாங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x