Published : 26 Dec 2022 04:15 AM
Last Updated : 26 Dec 2022 04:15 AM

மரக்காணத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் எக்கியர்குப்பம் மீனவர்கள் விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

விழுப்புரம்: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஒரு வாரத்திற்கு மேலாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். தற்போது மழை இல்லாததால் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்நிலையில் தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று காலை லேசான மழை பெய்தது. மேலும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக உள்ளது.

இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்ததால் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x