மறைந்த எஸ்ஐ குடும்பத்துக்கு உதவிய அதிகாரிகள்

மறைந்த எஸ்ஐ குடும்பத்துக்கு உதவிய அதிகாரிகள்
Updated on
1 min read

உடல்நலக் குறைவால் இறந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு காவல்துறை அதிகாரிகள் உதவி அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். காவல்துறையில் மத நுண்ணறிவுப் பிரிவு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார்.

அவரது மகன் எஸ்.ஹரிகர மணிகண்டன் ‘தி இந்து’-விடம் நேற்று கூறியதாவது: எனது தந்தை யின் சிகிச்சைக் காக உளவுத் துறை டிஐஜி ஈஸ்வரமூர்த்தி உத்தரவின்பேரில், யூனிட் எஸ்பி அருள் அரசு, டிஎஸ்பி பரமசிவம் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற உதவினர்.

மேலும், உயர் சிகிச்சைக்காக சுகாதாரத் துறை அமைச்சர் மூலம், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் உதவினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்த தும், அவரது உடலை அங்கிருந்து உடுமலைக்கு கொண்டுவரவும், இறுதிச் சடங்கு முடியும் வரையி லும் உடனிருந்து அனைத்து உதவிகளையும் செய்தனர். ஈமச் சடங்கு நிதியாக ரூ.25,000 வழங்கப்பட்டது.

வாரிசு அடிப்படையில் வேலைக்கும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர் என்றார்

ரத்தத்தில் உள்ள உயிரணுக் களை கொல்லும் கிருமி தாக்கிய தில் வெள்ளையணுக்களின் எண் ணிக்கை குறைந்து தனது தந்தைக்கு இறப்பு நேரிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்றும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in