காவல் நிலையங்களாக வங்கிகளை மாற்றக் கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

காவல் நிலையங்களாக வங்கிகளை மாற்றக் கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
Updated on
1 min read

வங்கிகள் வங்கிகளாக இருக்க வேண்டுமே தவிர காவல் நிலை யங்களாகவோ, நீதிமன்றங்களா கவோ மாறக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வங்கிகளில் ரூ.500, ரூ.1000 செலுத்த புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. மத்திய அரசு எதிர்பார்த்தவாறு, சொல்லிக்கொள்ளும் வகையில் கறுப்புப் பணம் பிடிபடப் போவ தில்லை. காரணம், கறுப்புப் பண முதலைகள் அனைவருமே தங் களிடமிருந்த பணத்தை உரியவர் களின் உதவியுடன் வெள்ளை யாக மாற்றிவிட்டனர். இந்த உண்மையை ஒப்புக் கொள்ளா மல் கொஞ்சமாவது கறுப்புப் பணத்தை பிடித்து விட்டதாகக் காட்டிக் கொள்ள மத்திய அரசு துடிக்கிறது. அதற்காகத்தான் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 தாள்களின் மதிப்பை திடீரென ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துக் காட்ட முயல்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பழைய ரூபாய் தாள் களை வங்கியில் செலுத்துவதற் காக விதிக்கப்பட்டுள்ள புதியக் கட்டுப்பாடுகள் கூட இதை அடிப் படையாகக் கொண்டவையாக இருக்கலாம்.

வங்கிகளில் இம்மாத இறுதி வரை ஒரே ஒருமுறை மட்டுமே ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் பணம் செலுத்த முடியும். அவ்வாறு செலுத்த வருபவர்களிடம் வங்கி அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி முழு திருப்தி அடைந்தால் மட்டுமே பணத்தை பெற்றுக் கொள் ளும் என்று மத்திய அரசு அறி வித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. வங்கிக்கு வருபவர்களை வாடிக் கையாளர்களாக பார்க்காமல், குற்றவாளிகளாக நினைத்து விசா ரிப்பது முறையல்ல. வங்கிகள் வங்கிகளாக இருக்க வேண்டுமே தவிர காவல் நிலையங்களா கவோ, நீதிமன்றங்களாகவோ மாறக்கூடாது. கறுப்புப் பண முதலைகள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில், அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதை தடுக்காத அரசு, ரூ.5 ஆயிரத்துக்கு மேல் செலுத்த வருபவர்களை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது தவறு. இதை கைவிட வேண்டும்.

கறுப்புப் பண ஒழிப்பு நட வடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நாளில் ரிசர்வ் வங்கி ஆளுகையில் இருந்த பணத்தின் மதிப்பு குறித்து முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில், அது குறித்த உண்மை நிலையை மத்திய அரசு விளக்க வேண்டும். அத்துடன், புதிய ரூபாய் தாள்களை அதிக அளவில் வெளியிட்டு பணத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in