மணிமங்கலத்தில் 2 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

மணிமங்கலத்தில் 2 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியப் பகுதிகளில் வார்தா புயல் சூறாவளிக் காற்றில் சிக்கி 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சேத மடைந்தன. சேதமடைந்த வாழை களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணிமங்கலம், மண்ணிவாக் கம், சேத்துப்பட்டு, படப்பை, கரசங் கால் உள்ளிட்ட பெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களில் உள்ள பல்வேறுகிராமங்களில் விவசாயம் நடை பெற்று வருகிறது. நெல், வாழை மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும் பாலானவர்கள் விவசாய தொழிலை நம்பி வாழ்கின்றனர்.

இந்நிலையில் அண்மையில் வீசிய அதிதீவிர புயலால் மணி மங்கலம் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் முற்றிலும் சேதமாகின. இதே போல் பல்வேறு இடங்களில் தோட் டக்கலை பயிர்கள் சேதமடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவ சாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தற்போது மாவட்டம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்த வுடன் நிவாரணம் வழங்கப்படும்' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in