ஜெயலலிதாவின் மறைவு சொல்லொணாத் துயரம்: விஜயகாந்த் புகழஞ்சலி

ஜெயலலிதாவின் மறைவு சொல்லொணாத் துயரம்: விஜயகாந்த் புகழஞ்சலி
Updated on
1 min read

ஜெயலலிதாவின் மறைவு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

ஜெயலலிதாவின் மறைவு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயலலிதாவை இழந்து வாடும் அதிமுகவினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in