தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ‘துணிவு' ட்வீட்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ‘துணிவு' ட்வீட்
Updated on
1 min read

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி தற்போது ‘துணிவு’ படத்திற்காக மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதையடுத்து படத்தின் பாடல்கள் ஓவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ‘துணிவு' பட போஸ்டரை பயன்படுத்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், "மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கிட தன் உயிரை பணயம் வைத்து பாடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டு ‘துணிவு' பட லோகோவை பயன்படுத்தியுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in