திருவண்ணாமலை அருகே கோர விபத்து: கார் மீது லாரி மோதி 7 பேர் பலி

திருவண்ணாமலை அருகே கோர விபத்து: கார் மீது லாரி மோதி 7 பேர் பலி
Updated on
1 min read

3 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை அருகே எடப்பாளையம் புறவழிச் சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் கார் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டும் மற்றும் காருக்கு உள்ளேயும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இது குறித்து திருவண்ணாமலை போலீ ஸாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். மேலும், 3 பேர் படுகாயமடைந் தனர். அவர்களை மீட்டு, திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை கிழக்கு போலீஸார் கூறும்போது, "விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பூ.மலையனூர் கிராமத்தில் வசிப்பவர் வாசுதேவன்(30). இவர், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 5-ம் தேதி திருமணம் நடை பெற்றது.

வாசுதேவன், அவரது மனைவி சசிகலா(27), அலங்கிரி கிராமத்தில் வசித்த வாசுவேதன் அக்கா செல்வ குமாரி(38), அக்கா கணவர் ஏழு மலை(39), அவர்களது மகன்கள் தர்ஷணா(8), ஹாசன்(6), ஏமம் கிராமத்தில் வசித்த சசிகலாவின் தந்தை சேட்டு(60), தாயார் கொளஞ்சி(57) மற்றும் சித்தப்பா வீரன்(54) ஆகிய 9 பேர் பூ.மலை யனூர் கிராமத்தில் இருந்து திருப்பதி கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு காரில் புறப்பட்டனர். காரை, அதே கிராமத்தில் வசிக்கும் வெங்க சேடன் மகன் விஜயகுமார்(20) ஓட்டினார்.

திருவண்ணாமலை அருகே எடப்பாளையம் புறவழிச் சாலை சந்திப்பில் வந்தபோது, காரின் வலது பக்கவாட்டில் லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சசிகலா, செல்வகுமாரி, ஏழுமலை, தர்ஷணா, சேட்டு, கொளஞ்சி மற்றும் ஓட்டுநர் விஜய குமார் ஆகிய 7 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.

ஓட்டுநரின் இருக்கை அருகே அமர்ந்திருந்த வாசுதேவன், அவர் மடியில் இருந்த சிறுவன் ஹாசன், பின் இருக்கை யில் இருந்த வீரன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றனர்.

இதுகுறித்து வாசுதேவனின் சித்தப்பா சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் தி.மலை கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநர் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in