Published : 11 Dec 2016 01:09 PM
Last Updated : 11 Dec 2016 01:09 PM

பள்ளிகளில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் நேற்று மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிரான்சிஸ் சேவியர் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவரது ஆன்மா சாந்தி அடைய மும்மத பிரார்த்தனையும் நடைபெற்றது. தமிழ் ஆசிரியை குளோரி பாஸ்கர் கருத்துரை வழங்கினார். பள்ளி முதல்வர்கள் மெனாண்டஸ் மற்றும் உமாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் முன்னிலை வகித்தார். 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஆ.திருச்சிற்றம்பலம் தலைமையில் மாணவ, மாணவியர், ஆசிரிய, ஆசிரியைகள் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

தென்காசி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் தாளாளர் செந்தில்பிரகாஷ் தலைமை வகித்தார். இயக்குநர் திலகவதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆணையர் மாரிமுத்து, தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் முதல்வர் ஆர்.ஜே.வி.பெல், துணைமுதல்வர் கஸ்தூரி பெல் தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இலஞ்சி பாரத் கல்வி குழுமம் சார்பில் பள்ளியின் தாளாளர் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வர் காந்திமதி மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தென்காசி கொடிக்குறிச்சி நல்லமணி கல்வி குழுமம் சார்பில் தலைவர் மணிமாறன், செயலாளர் பத்மாவதி மணிமாறன், ஆலோசகர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்ற இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

தென்காசி ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் சுப.திருவன், செயலாளர் சாந்தி திருவன், இணைச்செயலாளர் கிருஷ்ணகுமார், ஆசிரிய, ஆசிரியைகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தென்காசி எம்.கே.வி.கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தாளாளர் பாலமுருகன், முதல்வர் அந்தோணி பால்ராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ராம்மோகன், முதல்வர் ராணி ராம்மோகன், செங்கோட்டையை அடுத்த விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ள ட்ரஸர் ஐ லேண்ட் பள்ளியில் தாளாளர் ஷேக் செய்யது அலி, நிர்வாகி ஏ.முகம்மது பண்ணையார், முதல்வர் சமீமா பர்வீன் அஞ்சலி செலுத்தினர். தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முதல்வர் வி.ஆர்.ஜெயபிரசாத், இணை முதல்வர் ஜெயலட்சுமி அஞ்சலி செலுத்தினர்.

பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்று முதல்வரின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

மாணவர் சமுதாயத்துக்கு ஜெயலலிதா செய்த சாதனைகளை பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் விளக்கினார். துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுந்தரனார் பல்கலை

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணைவேந்தர் கி.பாஸ்கர் தலைமையில், மவுன ஊர்வலம் நடைபெற்றது. பதிவாளர் ஜான் டி பிரிட்டோ பேசினார்.

உயர்கல்வியில் ஜெயலலிதா வின் ‘விஷன் 2023’ ஆவணத்தை பூர்த்தி செய்ய மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதுபோல், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியரும் மவுன ஊர்வலம் நடத்தினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x