

சென்னை: பள்ளி கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி பெற கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார், முதல்வருக்கு அனுப்பிய மனு: தமிழகத்தில் கல்வி நிலையங்கள் கட்டிடஅனுமதி பெறுவதற்கு அரசாணை 76-ன் படிபள்ளி நிர்வாகிகள் ஒரு சதுர அடிக்கு ரூ.7.50செலுத்தி, விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் தொடர் விடுமுறை, பொருளாதார மேம்பாடு இல்லாததால் பள்ளிகளில் கல்விக் கட்டணங்கள் அதிக அளவில் நிலுவையில் உள்ளன.
இதனால் பள்ளி மற்றும் கல்வி நிலையங்களில் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக, பள்ளி நிர்வாகிகள் வரும் 31-ம் தேதிக்குள் கட்டிட அனுமதிபெற விண்ணப்பிக்க இயலாமலும், அரசுக்கு பணம் செலுத்த முடியாமலும் தத்தளித்து வருகின்றனர்.
தற்போது இந்த அரசாணைக்கு மேலும்6 மாதம் அவகாசம் கொடுத்தால், அனைத்துபள்ளிகளும் கட்டணத்தை செலுத்தி கட்டிடஅனுமதி பெற உதவிகரமாக இருக்கும்.தொடர்ந்து பள்ளிகள் நடத்தவும் ஏதுவாகஇருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.