வங்கக் கடலில் உருவான ‘வார்தா’ புயல் 12-ம் தேதி கரையை கடக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான ‘வார்தா’ புயல் 12-ம் தேதி கரையை கடக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Updated on
2 min read

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ‘வார்தா’ புயல் வரும் 12-ம் தேதி கரையை கடக்கிறது. அடுத்த இரு நாட்களுக்கு தமிழ கத்தில் மழை குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமத மாகவே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உருவான இரு புயல் களாலும், தமிழகத்துக்கு குறிப் பிடும்படியான மழை கிடைக்க வில்லை. இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகி யுள்ளது. இதனால் தமிழகத் துக்கு போதிய மழை கிடைக் குமா என்பது கேள்விக்குறி யாகவே உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமா னது, வலுப்பெற்று, இன்று புயலாக மாறியுள்ளது. ‘வார்தா’ என்று பெய ரிடப்பட்டுள்ள இந்த புயலானது தற்போது விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 1,060 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில், இது வடமேற்கு திசையில், தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இந்த புயல் வரும் 12-ம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்கள் வரும் 10-ம் தேதி முதல் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தின் தென் கட லோரப் பகுதியில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலு விழந்துவிட்டது. வடகிழக்கு பருவக் காற்று காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இப்பகுதியில் அடுத்த இரு நாட்களுக்கு குறிப்பிடும்படியான மழைப் பொழிவு இருக்காது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் உருவானதைத் தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப் பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறை முகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.

46-வது புயல்

புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கத்தை முதன் முதலில் ஆஸ்திரேலியர்கள்தான் தொடங் கினர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதை அவர்கள் கடைபிடித்து வருகின்றனர். பிறகு, பல நாடுகளும் புயலுக்கு பெயரிடத் தொடங்கின. அவரவர் விருப்பத்துக்கு புயலுக்கு பெயர் வைப்பதை ஒழுங்குபடுத்த, அந்த விவகாரத்தில், சர்வதேச வானிலை ஆய்வு மையம் தலையிட்டது. பின்னர் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை உருவாக் கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 2004-ம் ஆண்டு அம லுக்கு வந்தது. அன்றிலிருந்து இதுவரை 45 புயல்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ‘வார்தா’ புயல் 46-வதாக இடம்பெற்றுள்ளது. ‘வார்தா’ என்றால் உருது மொழி யில் ‘ரோஜா’என்று பொருள். பாகிஸ்தான் நாடு இந்த பெயரை சூட்டியுள்ளது.

66 சதவீதம் மழை குறைவு

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை இயல்பாக 370 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 129.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 66 சதவீதம் குறைவு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in