அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது நடவடிக்கை: நகர்ப்புற உள்ளாட்சிகளின் ஆணையர்களுக்கு அறிவுறுத்தல்

அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது நடவடிக்கை: நகர்ப்புற உள்ளாட்சிகளின் ஆணையர்களுக்கு அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டுமானங்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது சுற்றறிக்கை: நகர ஊரமைப்பு சட்டத்தின்கீழ் திட்ட அனுமதி வழங்குவதற்கும், அனுமதியற்ற அல்லது அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் மேம்பாடுகள் மீது உள்ளாட்சிகளால் நடவடிக்கைகள் எடுக்க திட்டக்குழுமங்கள் மற்றும் அரசால் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற அல்லது அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும்மேம்பாடுகள் மீது நடவடிக்கைகள் எடுக்கும்போதும், மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும்போதும் சட்டப்படி நடவடிக்கைஎடுப்பதில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

அதனால், உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், அனுமதியில்லாத கட்டுமானங்கள் மீதுநடவடிக்கைகள் எடுக்க இயலவில்லை.

எனவே, இதுகுறித்து ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகர ஊரமைப்பு இயக்குனரகம், நகராட்சி நிர்வாகஇயக்குனரகம் மற்றும் பேரூராட்சிகள் ஆணையரகம் ஆகியோர் அடங்கிய குழு அளித்த பரிந்துரைகள்படி, அமலாக்க நடவடிக்கை விதிகள் மற்றும் அறிவிப்பு படிவங்கள் வெளியிடப்பட்டன.

அரசு வகுத்த விதிகளை பின்பற்றியும், உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வுகளுக்கு உட்பட்டும் அனுமதியற்ற, அல்லது அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும்மேம்பாடுகள் மீது அமலாக்க நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in