கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தரும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது: காவிரி டெல்டா விவசாயிகள் கருத்து

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தரும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது: காவிரி டெல்டா விவசாயிகள் கருத்து
Updated on
1 min read

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என காவிரி டெல்டா விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்க் கும் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என கூறிய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவற்றை விசாரிக்க உரிமை இருப்பதாக நேற்று தெரிவித்தது.

மேலும், காவிரியில் இருந்து தமிழகத் துக்கு விநாடிக்கு தலா 2,000 கன அடி நீர் வழங்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக் கால உத்தரவு அடுத்த உத்தரவு பிறப் பிக்கப்படும் வரை தொடரும் என்றும் தெரிவித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறியபோது, “உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை, அதை மத்திய அரசு கண்டிக்கவும் இல்லை. இப்போது உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவையாவது மத்திய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீரை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது” என்றார்.

காவிரி டெல்டா விவசாயிகள் பாது காப்புச் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட் டச் செயலாளர் சுந்தர விமலநாதன் கூறும்போது, “மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தை மீறும் வகையில் இருந்ததை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றம் தற்போது 2,000 கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும் என கூறியுள்ளது. அதுபோன்று வழங்க மறுத்தால் கர்நாடக அரசு மீது, தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்” என்றார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் கூறும்போது, “காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அதேபோல உச்ச நீதிமன்றம் கூறி யுள்ளபடி 2,000 கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in