

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் மார்கழி மாத அமாவாசையையொட்டி ‘காளை விடும்’ விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன.
போக்குவரத்து காரணங்களை முன் வைத்து, ஏற்கெனவே நடத் தப்படும் வீதியில் நடத்தாமல் காளை விடும் விழாவை, பிள்ளையார் கோயில் வீதியில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன் தினம் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், கண்ணமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டுள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி காவல் துறையினர் சமசரம் செய்துள்ளனர்.
இதற்கிடையில், கொளத்தூர் கிராமத்தில் காளை விடும் விழா நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, திருப்பத்தூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து கொளத்தூர் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த காளைகள், ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்து சென்ற காளைகளை பிடிக்கும் முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டனர்.
காளைகள் மூட்டி தள்ளியதில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகாயமடைந் துள்ளனர். இவர்களில் பலத்த காயமடைந்தவர்கள், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காளை விடும் விழாவுக்கு அனுமதி வழங்கவில்லை என வருவாய்த் துறையினர் தெரி வித்துள்ளனர். காளை விடும் விழாவில் வழக்கமாக மேற் கொள்ள வேண்டிய பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வில்லை. பார்வையாளர்களை பாதுகாக்க, சாலையில் தடுப்புகள் அமைக்கவில்லை. கால்நடை களுக்கும் மருத்துவ சான்று வழங்க வில்லை. முதலுதவி சிகிச்சைக்கும் போதியளவு முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை.
அனுமதி வழங்கப்படாத நிலையில், காளை விடும் விழாவுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது தெரிந்திருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறையும், வருவாய்த்துறையும் மேற் கொள்ளவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட பிறகுதான், பிரதான சாலை வழியாக கொளத்தூர் கிராமத்துக்கு கொண்டு வரப் பட்ட காளைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். அனுமதியின்றி காளை விடும் விழாவை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித் துள்ளனர்.
காளைகள் மூட்டி தள்ளியதில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகாயமடைந் துள்ளனர்.