

சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆர்.சக்தி வேல் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு நாளை டிசம்பர் 24-ம் தேதி முதல் வரும் 2017 ஜனவரி 1-ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை விடப் பட்டுள்ளது. இந்த விடுமுறையை முன்னிட்டு வரும் டிசம்பர் 29-ம் தேதி விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும். அவசரம் கருதி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மட்டும் இந்த விடுமுறை கால நீதிமன்றம் விசாரிக்கும். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை கால நீதிபதிகளாக எஸ்.வைத்தியநாதனும், வி.பார்த்திபனும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அதேப்போல மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு விடுமுறை கால நீதிபதிகளாக கே.கல்யாண சுந்தரமும், ஆர்.மகாதேவனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நீதிபதிகள் ஒன்றாக இணைந்து காலையில் அமர்வு வழக்கு களையும், அதன்பிறகு தனித் தனியாக அமர்ந்து பிற வழக்கு களையும் விசாரிப்பர். இதற்காக வரும் டிசம்பர் 27-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு முன்பாக மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற பதிவுத் துறை வழக்கம்போல அனைத்து நாட்களிலும் இயங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.