

முருங்கப்பட்டி வெடி விபத்தில் இறந்த 19 பேரின் குடும்பத்தின ருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட குழுவினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் உப்பிலிய புரம் அருகே முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிமருந்து தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 1-ம் தேதி பயங்கர விபத்தில் 19 பேர் உடல் சிதறி பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீஸார் பதிவு செய்த வழக்கு, அன்றிரவே சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபிசிஐடி டிஐஜி வித்யா குல்கர்னி, எஸ்பி ராஜேஸ்வரி உள்ளிட்டோரைக் கொண்ட குழு வினர் சம்பவ இடத்தில் விசா ரணை மேற்கொண்டனர். அதனடிப் படையில் வெடிபொருள் தயாரிப்பு நிறுவன மேலாளர்கள் பிரகாசம், ராஜகோபால் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு முருங்கப் பட்டி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
அதைத்தொடர்ந்து, முதல் வரின் பொது நிவாரண நிதியிலி ருந்து, வெடி விபத்தில் இறந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயமடைந்த 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்த 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று வழங்கினர். துறையூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, எம்பி.க்கள் டி.ரத்தினவேல், ஆர்.பி.மருத ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, முதன்மை வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவ லர் என்.டி.சாகு, இணை அலுவ லர் அசோக்குமார் யாதவ் தலை மையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று அந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் அசோக்குமார் யாதவ் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “இந்த நிறுவன வளாகத்தில் ஒரு அலகு வெடித்து சிதறியுள்ளது. மீதமுள்ள அலகுகளில் வெடி மருந்துகளை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வது, அவற்றை அப்புறப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உயர்மட்ட குழுவின் அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை இருக் கும்” என்றார்.
இதற்கிடையே, சிபிசிஐடி டிஐஜி வித்யா குல்கர்னி தலை மையில் எஸ்பிக்கள் ராஜேஸ்வரி, ஜெயகவுரி மற்றும் அதிகாரிகள் திருச்சியில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது, “இவ்வழக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளதால், ஒவ்வொரு விஷயத்தையும் துல்லியமாக ஆய்வு செய்து, நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறோம். இதற்காக 6 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றனர்.
ஒரு அலகு வெடித்து சிதறியுள்ளது. மீதமுள்ள அலகுகளில் வெடி மருந்துகளை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்து, அவற்றை அப்புறப்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.