Published : 23 Dec 2022 06:00 AM
Last Updated : 23 Dec 2022 06:00 AM

வார்டு மக்களின் குறைகளுக்கு தீர்வு காண சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரம் ஏரியா சபைகள் அமைப்பு

சென்னை: தமிழக அரசு அறிவுறுத்தல்படி சென்னை மாநகராட்சியில் 2ஆயிரம் ஏரியா சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வரைபடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் பதவிகள் உள்ளன. வார்டுக்கு தேவையான திட்டங்களை பரிந்துரைப்பது, குறைகளைத் தெரிவித்து தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும். இதில் அந்த வார்டில் உள்ள ஏரியாக்களின் அடிப்படையில் வார்டு கமிட்டி உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம். இந்த கமிட்டியின் தலைவராக அந்த வார்டின் கவுன்சிலர் இருப்பார். 3 மாதங்களுக்கு ஒரு முறை அவரது தலைமையில் வார்டுகமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும்என தமிழக அரசு விதிகளை வகுத்துள்ளது.

வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகள் தங்களது வார்டுக்கு தேவையான திட்டங்கள் குறித்த பரிந்துரைகளை கவுன்சிலர்களிடம் அளிக்கலாம். அதேபோல் பொதுமக்களின் குறைகளை மன்றத்தில் தெரிவித்து தீர்வு காணலாம். அரசின் அறிவுறுத்தல்படி, மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 10 ஏரியா சபைகள்அமைக்கப்பட்டு, சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் மென்நகல் மற்றும் வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள ஏரியா சபைகள் அடங்கிய வரைபடத்தின் மென்நகல் ஆகியவை பொதுமக்களின் தகவலுக்காகவும், பார்வையிடும் பொருட்டும், சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/area_sabha/ என்ற இணையதள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x