

சென்னை: பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், டிச.30-ம் தேதி நடைபெறும் என கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், ‘2022-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ம் ஆண்டை வரவேற்போம்’ என்ற தலைப்பில் புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் டிச. 30-ம் தேதி நடைபெறவுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு, கட்சித் தலைவராகிய நான் தலைமையேற்கிறேன்.
கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பல்வேறு அணிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்.