இபிஎஸ்- ஓபிஎஸ் மோதல் விவகாரம் அண்ணன், தம்பி பிரச்சினை: செல்லூர் கே.ராஜூ கருத்து

பரவை பேரூராட்சி விளையாட்டுத் திடலில் குளியலறை அமைப்பதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு. படம்: நா.தங்கரத்தினம்
பரவை பேரூராட்சி விளையாட்டுத் திடலில் குளியலறை அமைப்பதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு. படம்: நா.தங்கரத்தினம்
Updated on
1 min read

மதுரை: இபிஎஸ், ஓபிஎஸ் மோதல் விவகாரம் அண்ணன், தம்பி பிரச்சினை, என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து பரவை பேரூராட்சி விளையாட்டு மைதானத்தில் புதிய குளியல் தொட்டி, சுகாதார வளாகம் மற்றும் மின் மோட்டார் அமைப்பதற்கான பூமி பூஜையை முன் னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு நேற்று தொடங்கி வைத்தார். பரவை பேரூராட்சித் தலைவர் கலா மீனா மற்றும் துணைத் தலைவர், கவுன் சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது: தமிழகத்தில் வரி உயர்வு, விலைவாசி உயர்வைக் கண்டிக்க வேண்டிய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி கள் ஒரு சீட்டு, இரண்டு சீட்டுகளுக்காக வாய் மூடி மவுனமாக உள்ளன. எல்லோரும் அதிமுக உட்கட்சி பிரச் சினையைப் பற்றித்தான் பேசுகிறார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் இடையே உள்ள விவகாரம் அண்ணன், தம்பி பிரச்சினை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

கருணாநிதிக்கும், வைகோவுக்கும் இல்லாத பிரச்சினையா?, கடைசியில் வைகோ கருணாநிதியிடம் போய் சேர வில்லையா?. நாட்டியில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. ஏழரைக் கோடி மக்களுக்கான தேவைகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. மதுரைக்கு குடிநீர் வழங்கும் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் 2023-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதி கூறியபடி முடிக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in