

கிறிஸ்துமஸ் பண்டிகை சென்னை யில் நேற்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தேவாலயங் களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
சென்னையில் 10 நாட்களுக்கு முன்பே கிறிஸ்துமஸ் கொண்டாட் டங்கள் களைகட்டத் தொடங்கியது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசு கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் வகையில் குடில்கள், மரங்களை அமைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்தனர். அத்துடன், மின்விளக்குகளால் ஆன வண்ண வண்ண ஸ்டார்களும் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டன. தேவாலயங்கள் மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டன.
தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. குறிப்பாக, சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், செயின்ட் தாமஸ் தேவாலயம், மயிலாப்பூர் லஸ் பிரகாசமாதா தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், பாரிமுனை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த் தனையில் குளிரையும் பொருட் படுத்தாமல் ஏராளமானோர் பங் கேற்று பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் கேக், இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வாண வேடிக் கையும் நடைபெற்றது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
முன்னதாக தேவாலயங்களுக்கு வந்தவர்களை கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் வரவேற்றனர். அத்துடன் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர். கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து தங்கள் வீடுகளில் கேக், இனிப்பு பலகாரங்களை செய்து தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பேக்கரிகளில் விதவிதமான கேக்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.