

என் மாணவர்கள் மூலம் இந்தியாவுக்கு ஆசிய அளவில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுத் தருவதே லட்சியம் என்று, 10 ஆண்டுகள் போராடி விளையாட்டுத் துறையில் நிரந்தர பயிற்சியாளரான புதுக்கோட்டை தடகள வீராங்கனை சாந்தி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கத்தக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. இவர், கடந்த 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள் ளிப் பதக்கம் வென்றார். பின்னர், உடல் தகுதி (பாலினம்) பிரச்சி னையால் அடுத்தடுத்த போட்டி களில் பங்கேற்க தடை விதிக்கப் பட்டதுடன் சாந்திக்கு வழங்கப்பட்ட பதக்கமும் பறிக்கப்பட்டது.
எனினும், தமிழக அரசு அப்போது அவருக்கு அளித்த ரொக்கமும், புதுக்கோட்டை மாவட்ட விளை யாட்டு அரங்கில் கிடைத்த, தற்காலிக தடகளப் பயிற்சியாளர் பணியும் அவரைத் தேற்றியது. பயிற்சியாளர் பணியை நிரந்தரம் செய்ய சாந்தி வலியுறுத்தியபோது, போதிய சான்றிதழ் இல்லை என அலுவலர்கள் தட்டிக்கழித்தனர். இதனால், 2010 ஜூலை 31-ல் தனது தற்காலிக பணியை ராஜினாமா செய்துவிட்டு பெற்றோருடன் செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
இதையடுத்து, பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்(சாய்) பயிற்சி மையத்தில் 2014-ல் தடகளப் போட்டி பயிற்சியாளருக்கான ஒரு வருட பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர், அந்த ஆணையத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே, பறிக்கப் பட்ட பதக்கத்தை அளிக்கவோ, வேலைவாய்ப்பு அளிக்கவோ இயலாது என மத்திய விளையாட்டு அமைச்சகம் எழுத்துபூர்வமாக அவருக்கு பதில் அனுப்பியது.
எனினும் அவர், மாநில அரசை தொடர்ந்து நம்பி இருந்தார். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக பணி புரிவதற்கான ஆணையை, மாநில பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன் சென்னையில் நேற்று வழங்கியுள்ளார். பயிற்சியாளராகி யுள்ள சாந்தி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னையில் நேரு விளையாட் டரங்கில் பயிற்சியாளர் பணி வழங் கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட் களில் அந்தப் பணியில் சேர உள்ளேன். என்னிடம் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய அளவிலான பதக்கம் பறிக்கப் பட்டிருந்தாலும், தன்னம்பிக்கை- விடா முயற்சியால் இந்த இடத் துக்கு வந்துள்ளேன்.
தடகளப் போட்டியில் ஆசிய அளவிலான பதக்கங்களை என் மாணவர்கள் மூலம் பெற்றுத் தந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதே என் லட்சியம். என் தகுதிக்கு அங்கீகாரம் அளித்த மாநில அரசுக்கும், மாநில விளை யாட்டுத் துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.
தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுநர் பணி நியமன ஆணையை அமைச்சர் க.பாண்டியராஜன் நேற்று வழங்கினார். அருகில் அரசு முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார்.