வேலம்மாள் மருத்துவமனை- ‘தி இந்து’ தமிழ் இணைந்து நடத்தும் மதுரையில் மார்கழி மஹோத்ஸவ விழா: சுதா ரகுநாதன், ராஜேஷ் வைத்யா இசை நிகழ்ச்சி

வேலம்மாள் மருத்துவமனை- ‘தி இந்து’ தமிழ் இணைந்து நடத்தும் மதுரையில் மார்கழி மஹோத்ஸவ விழா: சுதா ரகுநாதன், ராஜேஷ் வைத்யா இசை நிகழ்ச்சி
Updated on
1 min read

மதுரை வேலம்மாள் மருத்து வமனை -‘தி இந்து’ தமிழ் இணைந்து நடத்தும் மார்கழி மஹோத்ஸவத்தில் கர்னாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் வரும் ஜன. 7, 8 தேதிகளில் நடக்கவுள்ளதாக வேலம் மாள் கல்வி குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தெரிவித் துள்ளார்.

இந்த சிறப்பு இசை நிகழ்ச்சிகள் குறித்து எம்.வி.முத்துராமலிங்கம் நேற்று கூறியதாவது:

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்து கடந்த ஆண்டில் மார்கழி மஹோத்ஸவ இசை நிகழ்ச்சியை நடத்தின. அதில், நித்ய மகாதேவன் இன்னிசை, கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மதுரை மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த இசைப் பிரியர்கள் ஏராளமானோர் பங் கேற்று சிறப்பித்தனர்.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டு மார்கழி மஹோத்ஸவ இசை நிகழ்ச்சிகள் வரும் 2017 ஜன. 7-ம் தேதி தொடங்குகின்றன. விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியிலுள்ள காமராஜர் அரங்கில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முதல் நாளான ஜன. 7-ம் தேதி சனிக்கிழமை கலைமாமணி சுதா ரகுநாதனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2-ம் நாளான ஜன. 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலைமாமணி ராஜேஷ் வைத்யா குழுவினரின் வீணை இசைக் கச்சேரி நடைபெறும். இரு நிகழ்ச்சி களும் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணிக்கு நிறைவடையும்.

நிகழ்சிக்கான அனுமதி இலவசம். ஆனால் அழைப்பிதழ் அவசியம். அழைப்பிதழை பெற வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை 0452-2510114, 96777 36461 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in