தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்யத் தயார்: முதல்வரிடம் ராஜ்நாத் சிங் உறுதி

தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்யத் தயார்: முதல்வரிடம் ராஜ்நாத் சிங் உறுதி
Updated on
1 min read

வார்தா புயலால் பாதிக்கப்பட் டுள்ள தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நேற்று மாலை 4.30 மணிக்கு தொலைபேசியில் பேசிய அவர், வார்தா புயல் பாதிப்பு குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் நேற்று மாலை 4.30 மணிக்கு தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வார்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

‘‘வார்தா புயல் வரும் என்பது அறிந்து அதனை எதிர்கொள்ள தமிழக அரசு இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. புயல் பாதிப்புகளைக் கண்ட றிந்து மீட்பு, நிவாரணப் பணி களை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக் கப்பட்டுள்ளனர். முன்கூட்டியே கணிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.ஆர்.டி.எப்.), மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எப்.) ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. இது தவிர தரைப்படை, விமானப் படை, கப்பல் படை வீரர்களும், கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்களும் தயார் நிலையில் உள் ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வரு கிறது’’ என ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக் கம் அளித்தார்.

புயல் பாதிப்புகளை எதிர் கொள்ள தேவையான எந்த உதவி களையும் செய்ய மத்திய அரசு தயா ராக உள்ளது என முதல்வரிடம் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in