Published : 26 Dec 2016 09:22 AM
Last Updated : 26 Dec 2016 09:22 AM

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்: கோயம்பேடு காய், கனி வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டுமென கோயம் பேடு மலர், காய், கனி வியாபாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கோயம்பேடு மலர், காய், கனி, மலர் வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கோயம்பேட்டில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

விவசாயத்தையும், விவசாயி களின் வாழ்வாதாரத்தையும் பாது காக்க காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு ஆகிய வற்றை மத்திய அரசு அமைக்க வேண்டும், மீனவர் வாழ்வா தாரத்தை பாதுகாக்க கச்சத் தீவை மீட்க வேண்டும், கோயம்பேடு காய், கனி அங்காடி வளாகம் அருகே வுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், கோயம்பேடு அங்காடி யில் பணியாற்றி வரும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் நலன் காக்க மலிவு விலை உணவ கம், குளியல் அறைகளை கட்டித்தர சிஎம்டிஏ நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி, மலர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறும்போது, ‘‘பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் எங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி, ஏடிஎம் மூலம் மக்களுக்கு போதிய அளவில் பணம் கிடைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண் டும் உட்பட பல்வேறு தீர்மானங் களை நிறைவேற்றியுள்ளோம். எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்காவிட்டால் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தவுள்ளாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x