

ரூபாய் நோட்டுகள் மாற்றிய விவ காரத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த 12 வங்கி மேலாளர்களிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் பிடிபட்ட 2000 ரூபாய் நோட்டு கள் சீரியல் எண் அடிப்படையில் பார்த்தபோது அவற்றில் பல 2000 ரூபாய் நோட்டுகட்டுகள் திண்டுக்கல் லில் உள்ள வங்கிகளில் இருந்து பெறப்பட்டது தெரியவந்துள்ளது.
சேகர் ரெட்டியின் கூட்டாளியான திண்டுக்கல்லை சேர்ந்த ரத்தினம், திண் டுக்கல்லில் உள்ள தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக கோடிக் கணக்கில் மாற்றிக்கொடுத்த தாகக் கூறப்படுகிறது. இந்த பணமாற்றம் திண்டுக்கல்லில் மட்டும் 12க்கும் மேற்பட்ட வங்கிகளில் நடந்துள்ளது. இதற்கு உதவியாக வங்கி மேலாளர் கள் செயல்பட்டுள்ளனர். இதில் பெரும் பாலானவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள். ஒருசில தனியார் வங்கி களின் மேலாளர்களும் பணமாற்றத் தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் வங்கிகளுக்கு அனுப்பப்படும் 2000 ரூபாய் நோட்டு களின் சீரியல் எண்கள் பதிவு செய் யப்பட்டதால் அதை கண்டு எந்தெந்த வங்கியில் இருந்து பெறப்பட்ட நோட்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரத்தினத்தை கைது செய்ததைத் தொடர்ந்து அவருக்கு உடந்தையாக சட்டவிரோத பணமாற்றத்தில் ஈடுபட்ட 12-க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் சிக்க உள்ளனர். இவர்களிடம் வருமானவரித் துறையினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.