Published : 21 Dec 2022 06:07 AM
Last Updated : 21 Dec 2022 06:07 AM

கட்டிடம் கட்ட தோண்டப்படும் மண்ணை எடுத்துச்செல்ல அனுமதி பெற வேண்டும்: புவியியல் மற்றும் சுரங்கத் துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள அடித்தளம் அமைக்கும்போது எடுக்கப்பட்ட மண்ணை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல முன் அனுமதி பெறவேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சென்னை மெட்ரோ சுரங்கப்பணிகள் மற்றும் இதர கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அடித்தளம் அமைக்க பள்ளம் தோண்டப்படும்.

அவ்வாறு தோண்டப்படும்போது கிடைக்கும் மண்ணை கட்டுமான இடங்களை விட்டு வெளியில் எடுத்துச் செல்லகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் சட்டம் மற்றும் தமிழ்நாடு சிறு கனிம விதிகள்படி, உரிய முறையில் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்று உரிய நடைச்சீட்டுடன் கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

சட்டம், விதிகளுக்கு புறம்பாகசெயல்படுவோர் மீது நடைமுறையில் உள்ள விதிகளின் கீழ் குற்றவியல் மற்றும் அபராத நடவடிக்கைஎடுக்கப்படும். இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 8-வது தளத்தில் இயங்கும் புவியியல் மற்றும்சுரங்கத் துறை உதவி இயக்குநர்அலுவலகத்தை அணுகும்படி கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x