Published : 16 Dec 2016 10:07 AM
Last Updated : 16 Dec 2016 10:07 AM

கோவையில் ஒருங்கிணைந்த தங்க நகை தொழிற்பூங்கா அமையுமா?- எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள்

தங்க நகை வடிவமைப்பு தரத்தை உயர்த்தவும், நவீன டிசைன்களில் நகைகளை வடிவமைக்கவும் அரசு தொழில்நுட்ப உதவி செய்ய வேண்டும் என தங்க நகை உற்பத்தி யாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக கோவையில் ஒருங்கி ணைந்த தங்க நகை தொழிற்பூங்கா அமைக்கப்படுமா என்றும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சுதந்திரத்துக்கு முன்பு மைசூரு, கேரளா, மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்து கோவைக்கு பொற் கொல்லர்கள் இடம்பெயர்ந்தனர். முதலில் வீடுகளில் மட்டுமே நகை செய்துகொண்டு இருந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகரிக்கத் தொடங்கியதால் சிறு கடைகள் உருவாகின. பின்னர், பணம் படைத்தவர்கள் முதலீடு செய்து, பொற்கொல்லர்களை அமர்த்தி நகைகளைச் செய்து, விற்கத் தொடங்கினர்.

கோவையில் தங்க நகை உற்பத்தித் தொழில் பெரிதும் விரி வடைந்து, 1970-75ம் ஆண்டுகளில் இங்கு உற்பத்தியாகும் நகைகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் 75 சதவீதம் கோவையில் தயாராகின. பின்னர், மும்பை, கொல்கத்தா நகரங்கள், நுகர்வோரின் ரசனைக்கேற்ற நகை களைத் தயாரித்து கோவையைப் பின்னுக்குத் தள்ளின. இதற்கிடை யில், 1998-ல் கோவை தொடர் குண்டுவெடிப்பு, தொழில்துறையை புரட்டிப் போட்டது. அப்போது, சுமார் 1.50 லட்சம் நகை உற்பத்தி தொழிலாளர்கள் இருந்தனர். குண்டு வெடிப்பால் அச்சத்துக்கு உள்ளான 50 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள், கோவையில் இருந்து வெளியேறினர். இதனால் மீண்டும் தங்க உற்பத்தித் தொழிலில் கோவை முன்னிலை பெற முடிய வில்லை.

ஒரு லட்சம் தொழிலாளர்கள்

இதுகுறித்து கோவை நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலை வர் பி.முத்துவெங்கட்ராம் கூறிய தாவது: தற்போது தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் தங்க நகைப் பட்டறைகள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பணி யாற்றுகின்றனர். கோவையில் மட்டும் 20 ஆயிரம் பட்டறைகளில், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். கோவையில் தயாரிக்கப்படும் ஜிமிக்கி, தோடு தொங்கல், லேடீஸ் மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், செயின்கள் ஆகியவற்றுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

தமிழகத்தில் தயாரிக்கப்படும் நகைகள், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கி லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற் றும் அரபு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இறக்குமதிக்கு விதிக்கப்படும் 10 சதவீத வரியால், நகைகளின் விலை உயர்கிறது. இதனால் நகைகளை வாங்குவது குறைவதால், உற்பத்தி யும் பாதிக்கப்படுகிறது. எனவே, இறக்குமதிக்கு 2 சதவீத வரி மட்டுமே விதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

பி.முத்துவெங்கட்ராம்

டிசைனிங் ஸ்டுடியோ

டிசைனிங் ஸ்டுடியோ அமைத்து, திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு கள் நடத்தினால், பொற்கொல்லர் களின் திறமை மேலும் அதிகரிப்ப தோடு, தங்க நகை உற்பத்தித் தொழிலில் தமிழகம் மீண்டும் முதலிடத் தைப் பிடிக்கும்.

நவீன நகை தயாரிப்பு இயந்தி ரங்கள், லேசர் மார்க்கர், வெல்டர், டை மேக்கர், சிஎன்சி கட்டிங் இயந்தி ரங்கள் உள்ளிட்டவற்றைத் தருவிக்க வேண்டும். அரசு சார்பில் தங்க நகை தொழிற்பூங்கா அமைத்து, டிசைனிங் ஸ்டுடியோ, இறக்குமதி செய்யப்பட்ட நவீன இயந்திரங்கள், நகை தயாரிப்பு பயிற்சிக் கூடம், பாதுகாப்புப் பெட்டகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுவர வேண்டும்.

இதன் மூலம் நகை தயாரிப்புத் தொழில் மேம்படுவதுடன், அதிக மானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது தென்னிந்தி யாவிலேயே தங்க நகை உற்பத் திக்கு சிறந்து விளங்கும் கோவை, இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியாவிலேயே முதன்மை இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x