திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் சந்திரமவுலி மாரடைப்பால் கவலைக்கிடம்: சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் சந்திரமவுலி மாரடைப்பால் கவலைக்கிடம்: சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Updated on
1 min read

சென்னை: திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி மகன் சந்திரமவுலி மாரடைப்பு காரணமாக மிகவும் கவலைக்கிடமான நிலையில்சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மாரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி(28).இவருக்கும், தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக திருமண அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சந்திரமவுலி வழங்கி வந்தார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை நேற்று முன்தினம் மாலை வழங்கிக் கொண்டிருந்தபோது, சந்திரமவுலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சந்திரமவுலிக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளதால், இதயம், நுரையீரலை மீட்டெடுக்க எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகள் செயலிழப்பால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளஅவரை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in