

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் பாமக களத்தில் இறங்கி போராட்டம் நடத்தும் என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பாமக சார்பில் ’எதிர்நோக்கும்-2017’ என்ற தலைப்பில் சென்னை தி.நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்துப் பேசினார். முன்னதாக பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராம தாஸ் பேசும்போது, ‘‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை அல் லது வீடியோ பதிவை கண் டிப்பாக வெளியிட வேண்டும்.
ஒரு முதல் வரி்ன் மரணம் மற் றும் அவரது உடல் நிலைகுறித்து அறிந்துகொள்ள எல்லோருக்கும் உரிமை உள்ளது. அப்படி வெளி யிடாவிட்டால் பாமக களத்தில் இறங்கி போராட்டம் நடத் தும். அதேபோல மக்கள் மீது உண்மை யான அக்கறை இருந்தால் திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் 6 மது ஆலை களையும் ஸ்டாலின் மூடுவாரா?’’ என சவால்விட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘தமிழகத்தின் தற் போதைய அவல நிலைக்கு திமுக, அதிமுகவே காரணம். எனவே, மக்களே நீங்களாக சிந்திக்காவிட்டால் உங்களை ஆண்டவனால்கூட காப் பாற்ற முடியாது. எங்களுக்கு ஒரே யொரு முறை வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தை முன்னேற்றிக் காட்டு கிறேன்’’ என்றார்.