வத்திராயிருப்பு அருகே தாய், சிசு உயிரிழந்த சம்பவம்: மருத்துவர், செவிலியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தல்

தாய், சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.
தாய், சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசவமான சிறிது நேரத்தில் தாய், சிசு உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர், செவிலியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் மனைவி அரங்கநாயகி (18). இவர் பிரசவத்துக்காக வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை இரவு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெண் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்தது.

அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால் அரங்கநாயகியின் உடல்நிலை மோசமானது. அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து அரங்கநாயகியின் தந்தை ஆசீர்வாதம் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்தார். அரங்கநாயகிக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாததே இதற் குக் காரணம்.

மேலும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அரங்கநாயகியை அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். பணி நேரத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததால்தான் இருவரும் இறந்தனர். எனவே மருத்துவர், செவிலியர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இது குறித்து மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in