

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னைக்கு வந்தது. பயணிகள் அனைவரும் சுங்கச் சோதனையை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். பயணிகளின் உடைமைகள் வரும் கன்வேயர் பெல்ட் அருகே ஒரு பை கேட்பாரற்று இருந்தது.
சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அந்த பையை திறந்துப் பார்த்தனர். அதில் தலா 100 கிராம் எடையுள்ள 10 தங்கக் கட்டிகள் இருந்தன. தங்கத்தைக் கடத்தி வந்து, விட்டுச் சென்றது யார் என்று கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சிங்கப் பூரில் இருந்து ஒரு விமானம் வந்தது. சுங்கத்துறை அதி காரிகள் பயணிகளைச் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த சென் னையைச் சேர்ந்த ராஜா (54), சலீம் (42) ஆகியோரை சோதனைச் செய்தனர். அவர் களில் ராஜா உள்ளாடைக்குள் 500 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளையும், சலீம் 600 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகளையும் மறைத்து வைத்தி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.