பிறருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அதிமுகவினருக்கு நடிகை விஜயசாந்தி வேண்டுகோள்

பிறருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அதிமுகவினருக்கு நடிகை விஜயசாந்தி வேண்டுகோள்
Updated on
1 min read

பிறருக்கு வாய்ப்பு கொடுக்காமல் அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து ஜெயலலிதாவின் திட்டங்களை மக் களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நடிகை விஜயசாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால் நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. பொதுமக்களின் வசதிக்காக எம்ஜிஆர் நினைவிடம் வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 11.50 மணியளவில் ஜெய லலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினிகாந்த் ரசி கர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

மதியம் 1.10 மணியளவில் நடிகை விஜய சாந்தி வந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எத்தனையோ கஷ்டங்களை தாண்டி அவர் போராடியுள்ளார். மக்களுக்காக நல்ல பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தற்போதுள்ள சூழலில் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஏனெனில், சிலர் தொந்தரவு செய்ய வேண்டும் என்று உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அதிமுக தொண்டர்கள், தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து, ஜெயலலிதாவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நிரந்தரமாக அதிமுக இருக்க வேண்டும். ஜெயலலிதா ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in