

சென்னையிலிருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, வேளச்சேரி ஆகிய ஊர்களுக்கு உட்பட்ட பகுதிகள்தான் புறநகர் பகுதிகளாக ரயில்வே துறையால் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்குள் 80 கி.மீ. தூரம் வரை செல்பவர்களுக்கு கட்டண உயர்வு இருக்காது என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புறநகர் ரயில் கட்டணத்தை மத்திய அரசு அண்மையில் உயர்த்தியது. புறநகர் ரயில் கட்டணம் அதிக அளவு உயர்த்தப் பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. டெல்லியில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவை எம்.பி.க்கள் பலர் நேரில் சந்தித்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து கட்டண உயர்வை திரும்பப் பெறுவதற்கு பதிலாக, புறநகர் பகுதிகளுக்குள் 80 கிலோ மீட்டர் தூரம்வரை செல்ல கட்டண உயர்வு இல்லை என்று அறிவிக்கப் பட்டது. 80 கிலோ மீட்டர் தூரம்வரை செல்ல கட்டண உயர்வு இல்லை என்று அறிவித்துவிட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சில பயணிகள் புகார் கூறினர்.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் அளித்த விளக்கம் வருமாறு:
டெல்லி, மும்பை, சென்னை என ஒவ்வொரு பெருநகரிலும் இயக்கப் படும் புறநகர் ரயில்களுக்கான எல் லைகள் வரையறை செய்யப்பட் டுள்ளன. இவை புறநகர் பகுதி என்றும், அதைத் தாண்டியுள்ள பகுதி புறநகர் அல்லாத பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னை மூர்மார்க்கெட் வளா கத்தில் இருந்து 42 கி.மீ. தொலை வில் உள்ள திருவள்ளூர், 48 கி.மீ. தொலைவில் உள்ள கும்மிடிப் பூண்டி, சென்னை கடற்கரையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள செங்கல்பட்டு, 20 கி.மீ. தொலைவில் உள்ள வேளச்சேரி ஆகியவைதான் சென்னை புறநகர் பகுதிகள் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளன. இதைத் தாண்டியுள்ள பகுதிகள் அனைத்தும் புறநகர் அல்லாத பகுதிகள் ஆகும்.
எனவே, புறநகர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் 80 கி.மீ. தூரம் வரை செல்லும் பயணிகளுக்கு கட்டணம் உயர்த் தப்படவில்லை.
உதாரணத்துக்கு செங்கல் பட்டு ஆவடி இடையே 78 கி.மீ., செங்கல்பட்டு அத்திப்பட்டு இடையே 79 கி.மீ., திருவள்ளூர் கூடுவாஞ்சேரி இடையே 79 கி.மீ., கும்மிடிப்பூண்டி வண்டலூர் இடையே 79 கி.மீ. இப்படி புறநகர் பகுதிகளுக்குள் 80 கி.மீ. தூரம் வரை செல்ல கட்டண உயர்வு இல்லை.
அதேசமயத்தில் ஒருவர் திருவள் ளூரில் இருந்து பொத்தேரி செல்ல (82 கி.மீ.) வேண்டுமானால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஏனெனில் பொத்தேரி 80 கி.மீ. அளவை தாண்டி வருவதால் புதிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதுபோலத்தான் சென்னையி லிருந்து அரக்கோணம் 69 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. ஆனால், அந்த மார்க்கத்தில் திரு வள்ளூர் வரைதான் புறநகர் பகுதி யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அதை தாண்டிய ஊர் களுக்கு செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் மிகக் குறைந்த அளவில்தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பையைப் போல சென்னைப் பெருநகரிலும் புறநகர் பகுதி எல் லையை அதிகரிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுத உள்ளோம். அதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்தால் சென்னை புறநகர் பகுதி எல்லை அதிகரிக்கப்பட்டு அரக்கோணம், திருத்தணி பகுதி மக்களும் பயன்பெறும் நிலை உருவாகும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.